அதிமுகவில் உட்கட்சி பூசல் விவகாரம் பூதாகாரமாக வெடித்துள்ளது. இதனால் OPS மற்றும் EPS இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் OPS தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் நேற்று காலை 10 மணிக்கு கூட்டினார் சென்னை வேப்பேரி ரிதர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இந்த் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், துணை முதலமைச்சர் டம்மி பதவி என்று எனக்கு தெரியும் . 4 வருட ஆட்சியில் நான் எதும் தவறு செய்திருந்தால் சொல்லுங்கள், பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். கட்சியின் சொத்து அவ்வளவும் தொண்டர்களின் உழைப்பு. நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னத்தை வழங்கும் .” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.