Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் தமிழச்சி” இந்தியை மறுக்கிறேன்…. அதிரடி காட்டிய கஸ்தூரி…!!!!

நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பு குறித்து தொடந்து பல்வேறு ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், நடிகை கஸ்தூரி இது குறித்து, “நான் இந்தியன்.

தமிழச்சி. தமிழ்பேசும் இந்தியனாக இருப்பதே பெருமை. இந்தியை மறுக்கிறேன், இந்தியாவை மறுக்கமாட்டேன். என் நாட்டின் இணைப்பு மொழி எது என்று விவாதிக்கிறேன். என் நாட்டின் இணைப்பை என்றும் துண்டிக்கமாட்டேன். வாதத்துக்காக கூட” என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |