தமிழகத்தில் இந்தித் திணிப்பு குறித்து பரபரப்பு புகார் ஒன்றை யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழியிடம் ஹிந்தி தெரியாவிட்டால் இந்தியர் இல்லை என அதிகாரி ஒருவர் கூறியதாக சொல்லப்பட்டதையடுத்து தமிழகத்தில் இந்தித் திணிப்பு நடவடிக்கை அதிகரித்து விட்டதாக கூறி பிரபலங்களும், பொதுமக்களும் நூதன முறையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். அந்த வகையில்,
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், i am tamil speaking indian மற்றும் ஹிந்தி தெரியாது போடா உள்ளிட்ட வாசகங்களை அடக்கிய டீசர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது கனிமொழி அவர்களுக்கு நேர்ந்த சம்பவத்தை போன்று, யுவன்சங்கர் ராஜாவுக்கும் நேர்ந்துள்ளது. அதாவது, மதுரை விமானநிலையத்தில் இந்தியில் பேசியது புரியவில்லை என கூறியதும்,
அதிகாரிகள் ஜோக்கடித்து கிண்டல் செய்ததாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். எனக்கு ஹிந்தி மீது எந்த வெறுப்பும் கிடையாது, அதை திணிக்காதீங்க என்றுதான் சொல்கிறேன். நான் இந்தியை எதிர்க்க வில்லை. நிறைய இந்திப் படங்களுக்கு இசை அமைத்துள்ளேன். எனது டீசர்ட்டில் இருந்த i am tamil speaking indian என்ற வார்த்தை உண்மைதான் அதில் மாற்றுக்கருத்து இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.