மது குடிக்க பணம் தராததால் மகன் தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமயில் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு செந்தில் என்ற மகன் உள்ளார். இவர் மது குடித்து விட்டு பணம் கேட்டு தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் தாய்க்கும் மகனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது பூமயில் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த செந்தில் தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.