Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நான் தான் இந்த வார்டு கவுன்சிலர்…. தேர்தலுக்கு முன்னரே கல்வெட்டு வைத்த நபர்….

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னரே திண்டிவனத்தில் 8-வது வார்டு கவுன்சிலர் எனக்கூறி நகராட்சித் தண்ணீர் தொட்டியில் கல்வெட்டு வைத்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டில் உள்ள ரவிச்சந்திரன் என்பவர் 8-வது வார்டு உறுப்பினர் எனக்கூறி பெயர் பொறிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் மனு தொடர்பாக தமிழக அரசு திண்டிவனம் நகராட்சி ஆணையர், அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Categories

Tech |