Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் தான் கொடியேற்றுவேன்”…. ஊராட்சி தலைவர் ஏற்றக்கூடாது…. பள்ளியில் பரபரப்பு…..!!!!

கோவை மாவட்டம் பேரூர் அருகில் மத்வராயபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இப்பள்ளியில் நேற்று 75-வது சுதந்திர தின விழா நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியரான ஜெயந்தி தலைமைதாங்கினார். இவ்விழாவில் ஊராட்சி தலைவர் கிட்டு சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் குணா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் விஜய சேகர், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் போது அங்கு இருந்தவர்கள் ஊராட்சி தலைவர் தேசியக்கொடியை ஏற்றவேணடும் என கூறினர். இதற்கு தலைமை ஆசிரியை எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் பள்ளியில் தலைமை ஆசிரியர்தான் கொடி ஏற்றவேண்டும் என அவர் கூறிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

அதன்பின் இருவரும் சமாதானம் செய்துகொண்டு, ஒன்றாக தேசியக்கொடியை ஏற்றினர். இந்நிலையில் ஊராட்சி தலைவர் இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால்தான், பள்ளி தலைமை ஆசிரியர் தேசியக்கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவித்தார் என கூறி அங்கு இருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையறிந்த வட்டாரவளர்ச்சி அலுவலர் சதீஷ், பேரூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் போன்றோர் பள்ளிக்கு நேரில் சென்று இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில் இனி வரும் காலங்களில் ஊராட்சி தலைவரே பள்ளியில் தேசியக்கொடி ஏற்றலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

Categories

Tech |