Categories
அரசியல்

நான் திமுகவில் சேர்ந்திருப்பேன்….! அமைச்சராக கூட ஆகி இருப்பேன்… சீமான் அதிரடி பேச்சு …!!

நான் எந்த இனத்தில் பிறந்தேனோ என்னால் முடிந்ததை செய்துவிட்டேன் என சீமான் தேர்தல் பரப்புரையில் கூறினார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான்,  நானும் தற்குறி தறுதலையாக தான் திரிந்திருப்பேன் பிரபாகரனை பார்க்கவில்லை என்றால். திமுகவில் தான் இருப்பேன், ஒருவேளை அமைச்சராக கூட இருந்திருக்கலாம், எம்பி, எம்எல்ஏ வாக கூட இருந்திருக்கலாம் பிரபாகரனை சந்திக்க வில்லை என்றால். இப்படி வெயில் முச்சந்தியில் நின்று கத்த வைத்தவர் பிரபாகரன் தான். இந்த பெருமகனார் தான். நான் பாட்டுக்கு படமெடுத்து நல்ல கோடிகோடியாய் சம்பாதித்து நல்ல வாழ்ந்திருப்பேன்.

வீட்டுக்காரன் வீட காலிபண்ணிட்டு வெளியே போ என சொல்லுறான். சரி எங்க போறது ? நம்ம போயிடலாம்… பிள்ளையை கூட்டிட்டு, மனைவியை கூட்டிட்டு…  என் வீட்ல நிறைய பேர் வேற இருக்கிறார்கள் வாத்து, கோழி, புறா இவைகள்தான் எங்க கூட்டிட்டு போறது, பிரச்சினை தான். என்ன பண்றது சொல்லுங்க ? பிறந்து விட்டோம், இந்த இனத்தில். செய்திடுவோம் நம்ம கடமையை செய்திடுவோம். பிறந்துடேன்  உங்க கூட… நீங்க ஓட்டு போடுங்க போடாம போங்க. நான் மரணிக்கும் போது நாம் பிறவி பயனை அடைந்து விட்டேன், நான் எந்த இனத்தில் பிறந்தேனோ என்னால் முடிந்ததை செய்துவிட்டேன்.

அதுக்கு முன்னாடி என் முன்னோர்களும் அதான் செய்திருக்கிறார்கள். சி.பாஆதித்தனார், மாபொ, கே.பி.விஸ்வநாத், மறைமலை அடிகள், கல்யாணசுந்தரனார், வஉசி என என் தாத்தா, பாட்டன்  எல்லோரும் இதை பண்ணிட்டார்கள். அவர் பேரன் நானும் முச்சந்தியில் இருந்து கத்துறேன், கேட்டால் கேளு, கேட்காட்டிடி போ, ஓட்டு போட்டோ போடு, போடலன்ன போ.. காலமறிந்து கூவும் சேவல்,  கவுத்தி போட்டாலும் நிற்காது கூவும் என்றான், நம்ம தாத்தா பட்டுகோட்டை என சீமான் தெரிவித்தார்.

 

Categories

Tech |