தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் எஸ் ஜே சூர்யா. பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் தற்போது வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஸ்பைடர், மான்ஸ்டர், மெர்சல் டான் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 50 வயதை கடந்துள்ள இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற காரணத்தை அவர் கூறியுள்ளார்.
அதாவது நான் சினிமாவில் நிறைய ரிஸ்க் எடுத்துள்ளேன். நியூ படத்தில் நான் சம்பாதித்த மொத்த பணத்தையும் முதலீடு செய்தேன். அப்படம் வெற்றி படமாக அமைந்தது. ஒருவேளை அப்படம் தோல்வி அடைந்திருந்தால், என் நிலைமை மோசமாகி இருக்கும். அப்படி மோசமாகி இருந்தால் அது என்னுடன் போயிருக்கும். ஒருவேளை எனக்கு திருமணமாகி இருந்தால் மனைவி குழந்தைகள் என இருந்தால் அவர்களையும் பாதிக்கும். இதனால் தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.