சேலம் மாவட்டத்தில் மீண்டும் படையெடுக்கும் கொரோனாவால் புதிதாக 26 நபர்கள் பாதிப்படைந்துள்ளார்கள்.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று அனைத்து பகுதிகளிலும் சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இத்தொற்று மென்மேலும் பரவாமலிருக்க அரசாங்கம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகலையும் , விதிமுறைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வந்த கொரோனா தொற்று தற்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் உருவெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் கொரோனா பரிசோதனை அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் பொதுமக்களுக்கு சுமார் 1,964 மாதிரிகள் எடுக்கப்பட்டது. இந்த மாதிரிகளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மொத்தமாக சேலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 964 ஆக உயர்ந்துள்ளது.