பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை கூறியதற்கு விஜய்பாபு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தயாரிப்பாளர், நடிகர் என வலம் வருகின்றார் விஜய் பாபு. மேலும் இவர் பல திரைப்படங்களில் முக்கிய வேடத்திலும் நடித்து இருக்கின்றார். இந்த நிலையில் விஜய் பாபு தயாரிப்பில் உருவான ஒரு படத்தில் நடித்த நடிகை ஒருவர் இவரின் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, ஆரம்பத்தில் தனக்கு உதவி செய்வது போல் பழகி பின் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மது மற்றும் போதை மருந்தை உட்கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னை நிர்வாணப்படுத்தி அதை வீடியோ எடுத்து சென்ற ஒன்றரை மாதங்களாக அதைக் காட்டி மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விஜய் பாபு பேஸ்புக்கில் விளக்கம் அளித்தபோது கூறியுள்ளதாவது, “நடிகையின் பெயரை வெளிப்படையாக கூறி, பாதிக்கப்பட்டது அந்த நடிகை இல்லை, நான் தான் எனவும் அந்த நடிகையை ஐந்து வருடங்களாக தனக்கு தெரியும் எனவும் தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அந்த நடிகை நடந்து கொண்டதற்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக” கூறியுள்ளார். இவர் நடிகையின் பெயரை வெளிப்படையாக தெரியப்படுத்தியதால் விஜய் பாபு மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.