நடிகை நதியா தான் நடித்த முதல் பாடல் காட்சியின் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் 80-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா . கடந்த 1985ஆம் ஆண்டு இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். இவர் தமிழில் படங்கள் நடிப்பதற்கு முன்னரே மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார்.
https://twitter.com/ActressNadiya/status/1372915824147587074
கடந்த 1984- ஆம் ஆண்டு ‘நோக்கெத்தே தூரத்து கண்ணும் நட்டு’ என்ற மலையாளப் படத்தில் தான் நதியா சினிமாவில் அறிமுகமானார். மேலும் இந்தப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதும் அவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் தான் முதன் முதலாக நடித்ததாக புகைப்படத்துடன் நதியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டீன் ஏஜ் வயதில் நதியா இருக்கும் இந்த அழகிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.