Categories
சினிமா தமிழ் சினிமா

நான் நடிப்பு பசியில் உள்ளேன்!… இப்போது என் முழு கவனமும் அதில்தான் இருக்கு!…. ரகுல் பிரீத் சிங் பேட்டி…..!!!!

தமிழில் கார்த்தி ஜோடியாக நடித்த தீரன் அதிகாரம் ஒன்று ரகுல் பிரீத் சிங்குக்கு திருப்பு முனை படமாக அமைந்தது. இவர் சூர்யாவுடன் என்.ஜி.கே. திரைப்படத்தில் நடித்தார். இப்போது கமல்ஹாசனுடன் “இந்தியன்-2″ படத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். அத்துடன் இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். அண்மை காலமாக ரகுல் பிரீத் சிங் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் தோல்வியடைந்தது.

இதன் காரணமாக அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குறைந்து இருப்பதாகவும், இதனால் திருமணம் செய்துகொண்டு திரையுலகை விட்டு ஒதுங்க போகிறார் எனவும் கிசுகிசுக்கள் பரவியது. இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் பேட்டி அளித்ததாவது ”ஒரு நடிகையாக நான் நடிப்பு பசியில் உள்ளேன். எனக்கு இருக்கக்கூடிய  நடிப்புபசி கொஞ்சமும் குறையவில்லை. இந்த ஆண்டு இதுவரையிலும் என் நடிப்பில் 5 திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளது.

தற்போது என் முழு கவனமும் அடுத்த வருடம் எத்தனை படங்களில் நடிக்கவேண்டும், என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் தான் இருக்கிறது. பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் வர வேண்டும் என்பதில் தான் எனக்கு ஆர்வம் இருக்கிறதே தவிர்த்து, வேறு எதன் மீதும் அக்கறை இல்லை. திருமணம் செய்யப் போகிறேன் என்ற தகவலில் உண்மையில்லை” என்று கூறினார்.

Categories

Tech |