Categories
மாநில செய்திகள்

நான் நன்றாக இருக்கிறேன்… “செவிலியர்களுடன் ‘சத்ரியன்’ படம் பார்க்கும் கேப்டன் விஜயகாந்த்!!

நான் நன்றாக இருக்கிறேன். என்னை கவனித்துக் கொள்ளும் செவிலியர்களுடன் ‘சத்ரியன்’ திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று விஜயகாந்த் ட்விட் செய்துள்ளார்.

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்துக்கு தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கோளாறு, தொண்டையில் தொற்று உள்ளிட்ட உடல் நல பாதிப்பு இருக்கிறது. இதன் காரணமாக அவரால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனது. இதனையடுத்து அவர் தனது உடல் நல பாதிப்புகளுக்காக சிங்கப்பூரில் இருக்கும் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.. அதேபோல சென்னை மற்றும் அமெரிக்காவிலும் சிகிச்சைகளை  தொடர்ந்து வந்தார் விஜயகாந்த்.

இதன் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 30ஆம் தேதி துபாய் சென்ற கேப்டன்  விஜயகாந்த்துக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் ஒரு போட்டோவை பதிவிட்டு டுவிட் செய்துள்ளார். அதில், நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம் என்று குறிப்பிட்டுள்ளார்..

Categories

Tech |