தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் கொரோனாவில் இருந்து தாம் நலமடைந்து விட்டதாகவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தொற்று பெரிய அளவில் தனது பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொற்றில் இருந்து குணமடைய விரும்பிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் முதலமைச்சர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய பணிகளை கவனிக்க வேண்டிய கோப்புகளை வீட்டிலிருந்தாலும் கவனிப்பேன் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.