Categories
உலக செய்திகள்

நான் நலமாக இருக்கிறேன்…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிபர் புதின்…. வைரலாகும் புகைப்படம்….!!!!!

பிரபல நாட்டு அதிபர் தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றி தன்னுடன் நினைத்துக் கொண்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷிய அதிபர் புதின் தனது வீட்டில் உள்ள மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துள்ளார்.இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை  பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். ஆனால் புதினின்  உடல்நிலை மோசமாக இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உக்ரைன்  நடத்திய தாக்குதலில் சேதம் அடைந்த கிரீமியா பாலத்தை சீரமைக்கும் பணியை அதிபர் புதின் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் பாலத்தில் காரை ஓட்டி சென்றுள்ளார். இதனை மக்கள் பார்த்துள்ளனர். மேலும்   இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |