கொரோனாவால் பாதிக்கப்பட்ட துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.அதனால் அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறார்.இதுபற்றி துணை குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதில் இருந்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
அவர் தற்போது உடல் நலமுடன் இருக்கிறார். கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வருகிறார்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நலம் பெற வேண்டி எனக்கு கடிதங்கள் அனுப்பிய அனைத்து நல் உள்ளங்களுக்கும்,எனது நலம் விரும்பி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.