Categories
சினிமா தமிழ் சினிமா

நான் நினச்சது நடக்கல….! ரஜினியை நடிக்க சொன்னதும் ஷாக் ஆகிட்டேன்…. மனம் திறந்த கமலஹாசன்….!!!!!

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, மணிரத்னம் வெற்றி பட்டியலில் முக்கிய படமாக இது இருக்கும். இது ஒரு சிறிய குடும்பம். இதில் பொறாமை பட நேரமில்லை. அதை இளம் வயதில் புரிந்து கொண்டவர் நானும் ரஜினியும். வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என சிவாஜி சொன்னார்.

அதை கேட்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன்னா, அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்றிருந்தேன். சரி சிவாஜி சாரே ரஜினினு சொல்லிட்டாரேன்னு அதை விட்டுவிட்டு.. அப்ப எனக்கு என்ன கேரக்டர்ன்னு கேட்டேன்? நீ அருண்மொழி வர்மன் கேரக்டர் செய் என்றார். அது அன்று நடக்காமல் போனது. இன்று. ரஜினி செய்ய நினைத்த கேரக்டரில் கார்த்தியும், எனக்கான கேரக்டரில் ஜெயம்ரவியும் நடிக்க கிடைத்துள்ளது. வெற்றி வரும், தோல்வி வரும் ஆனால், அதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

Categories

Tech |