Categories
தேசிய செய்திகள்

நான் படிக்கணும் உதவி செய்யுங்க….! நம்பிய சிறுமியை பலமுறை… இந்தியாவை அதிர வைத்த சம்பவம் …!!

வங்கிமேலாளர் ஒருவர் கல்வி கடன் வாங்கித்தருவதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் என்ற பகுதியில் வசித்து வரும் 53 வயதுள்ள நபர் பர்விந்தர் சிங். இவர் கடந்த மூன்று வருடங்களாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டில் பணிபுரியும் பெண்ணின் மகள் தன் தோழியை இவரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் அந்த பெண் தன் தோழியிடம் வங்கியின் மேலாளர் தனக்கு கடன் வாங்கி கொடுத்தார்.

எனவே உன் கல்விக்காக கடன் தருவார் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த பெண் பர்விந்தர் சிங்கை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அந்த சிறுமியை அவர் விரும்பியுள்ளார். எனவே அந்தப் பெண்ணிடம்  வங்கியில் கடன் வாங்கி தருகிறேன் நீ மேற்படிப்பு படிக்கலாம் என்று கூறி அவருடன் பழகியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண் அவருடன் அடிக்கடி ஷாப்பிங் சென்று வந்துள்ளார்.

அப்போது பர்விந்தர் சிங் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சிறுமியை ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அந்த காட்சிகளை போனில் வீடியோவாக எடுத்து கொண்டு சிறுமியை மிரட்டி வந்துள்ளார். அதன்பின்பு கோவாவில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு அழைத்துச்சென்று அச்சிறுமியை 3 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனையும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு சிறுமியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இதனால் மன விரக்தி அடைந்த அந்த பெண் அவரின் ஆசிரியர் ஒருவரிடம் கடந்த வாரத்தில் நான் தற்கொலை செய்யப் போகிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனைக்கண்ட ஆசிரியர் அவரின் பெற்றோர்களிடம் கூறி அப்பெண்ணை காப்பாற்றியுள்ளார். பின்பு அவர்கள் வங்கி மேலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் பர்விந்தர் மற்றும் அச்சிறுமியை அவருக்கு அறிமுப்படுத்திய பெண் மீதும்  வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |