ஹரியானா மாநில முன்னாள் முதல்வரை கண்டித்து தமிழக பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன், 20 தொகுதியிலும் பாஜக ஜெயிக்க போகுது. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க போகிறது. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும், தலைமையகத்தில் இருந்து வரும். என்ன கட்சியினுடைய தலைமை ? இன்று அல்லது நாளை அறிவிச்சுருக்காங்க பார்த்தீங்களா ?நிச்சயமாக வெற்றி பெறுவோம் பாருங்க.
பெட்ரோல் விலை, டீசல் விலை இவ்வளவு உயர்ந்தும் 20தொகுதியில் வெற்றி பெறுவீர்களா என்ற கேள்விக்கு ? நிச்சயமாக வெற்றி பெறுவோம். அதுல எந்த மாற்று கருத்தும் இல்லை. பிரதமருடைய திட்டங்கள் தமிழகத்திற்கு அதிக பலன் பெற்று இருப்பது மட்டுமல்ல. தமிழகத்தில் யார் யாரெல்லாம் அரசாங்கத்தினுடைய உதவிகளை பெறுகிறார்களோ…. அத்தனை பேருக்கும் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக அவர்களுக்கு அந்த உதவி வழங்குவது தான்
பிரதமர் உடைய மிக முக்கியமான விஷயமா பார்க்கிறோம். இதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள், நிச்சயமாக வெற்றி என்பது எங்களுடையது.
பாஜக தலைவர் சுப்ரமணியசாமி தமிழகத்தில் 1இடத்துல, 2இடத்துல தான் வெற்றி பெரும் என்று சொன்ன கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.நிச்சயமா பெண்கள் வேட்பாளர் பட்டியல் இருக்குறாங்க, எங்களுடைய கட்சி எல்லாரையும் கவனிக்குது, பெண்களையும் கவனிக்கிறது, இளைஞர்களையும் கவனிக்கிறது து, ஆண்களையும் கவனிக்குது. நாங்கள் எல்லாருக்குமான கட்சி, நாங்கள் குடும்ப கட்சி இல்லை. எங்க குடும்பத்துல இருந்து எல்லாம் யாரும் வேட்பாளர் இல்ல. எல்லா உழைக்கின்ற பெண்களுக்கு வாய்ப்பு இருக்கும் என அவர் தெரிவித்தார்.