கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் முக கவசம் அணியாமல் கலந்து கொண்டார்.
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும் முக கவசம் அணியாமல் கெத்து காட்டியவர் டொனால்டு டிரம்ப். ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவரை வற்புறுத்தியதால், உலகத் தலைவர் என்பதை கருத்தில் கொண்டு முக கவசம் அணிந்தார். கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அவர், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார். அமெரிக்காவில் அடுத்த மாதம் நடக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பங்கேற்க தீவிரம் காட்டியுள்ளார்.
இந்நிலையில் நேற்று ப்ளோரிடாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது டொனால்ட் ட்ரம்ப் முக கவசம் அணியாமல் மேடையில் காட்சியளித்தார். அப்போது அவர், “பவர்ஃபுல்லாக இருப்பதாக உணர்கிறேன். ஒவ்வொருவரையும் முத்தமிட விரும்புகிறேன்”என்று தனது வழக்கமான நகைச்சுவை உணர்வுடன் பேசினார். அவர் கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் குணமடைந்து விட்டதால் அவ்வாறு கூறியுள்ளார்.