பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்றும், பிரதமரின் பெயரானது மக்களின் மனதில் எழுதபட்டுள்ளது. இதற்கிடையில் விமர்சனங்களுக்கு எல்லாம் பிரதமர் செவி சாய்ப்பதில்லை என திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் பாக்யராஜ், நான் பேசியது யார் மனதையும் புண் படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். திராவிட தலைவர்கள் பார்த்து வளர்ந்தவன் நான். நான் பாஜக இல்லை. என்னுடைய சினிமாவிலும் திராவிட இயக்க தலைவர்களின் கருத்துக்கள் இருக்கும் இனியும் அது தொடரும் என்று தெரிவித்துள்ளார்.