நடிகர் தனுஷ் அவரது தயாரிப்பில் அதிக சம்பளம் கொடுத்தாலும் இனி நடிக்க மாட்டேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்த பின் சொந்தமாக படம் தயாரித்தால் மட்டுமே தன்னுடைய அதிகாரத்தை செலுத்த முடியும் என திட்டமிட்டவர். இந்நிலையில் அவர் தனியாக நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். அவர் 3 படத்தை முதன்முதலில் தயாரித்த போது அப்படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் 3 படத்தில் நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும் மீண்டும் அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்தார். இதனைத் தொடர்ந்து அனிருத் இசையமைத்த 2 படங்களிலும் இடம் பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து எதிர்நீச்சல் படத்திற்கு பின்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் சம்பளம் உயர்ந்தது. மேலும் தனுஷ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு வந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்நீச்சல் படத்திற்கு வாங்கிய சம்பளத் தொகை பேச படத்தை தொடர்ந்து தற்போது தனது மார்க்கெட்டுக்கு ஏற்ப சம்பளம் கேட்கிறாரா சிவகார்த்திகேயன், இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற தனுஷ் நான் பார்த்து வாய்ப்பு கொடுத்து, வாழ்க்கை கொடுத்த பையன் என் தயாரிப்பில் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு நடித்துவிட்டுப் போக வேண்டியதுதானே என சிவகார்த்திகேயனுக்கு தகவல் அனுப்பியுள்ளார் தனுஷ். மேலும் இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் எனக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தார் என்று வேண்டுமானால் சொல்லட்டும் வாழ்க்கை கொடுத்தார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இனிமேல் தனுஷ் அதிக சம்பளம் கொடுத்தாலும் இனி நடிக்க மாட்டேன் என மறுத்து பதில் அனுப்பியுள்ளார். இதேபோல இசையமைப்பாளர் அனிருத் அடுத்தடுத்த மற்ற படங்களில் இசையமைத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்து தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே சென்றாலும் தனுஷ் தயாரிப்பில் மட்டும் அவர் கொடுத்ததை தான் வாங்க வேண்டும் நிலை அனிருத்துக்கு இருந்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் அழைப்பு வந்தால் இப்போதைக்கு முடியாது என சொல்லி தப்பித்துக் கொள்வாராம் அனிருத். இதுபோல் கேமராமேன், துணை நடிகர்கள் ஆரம்பகட்டத்தில் பட வாய்ப்பு கொடுத்ததனால் தனுஷ் கொடுப்பதையே வாங்கி கொள்வார்கள் என கூறப்படும் நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் அனிரூத் தான் தப்பித்துக் கொண்டார்கள் என்றும் ஆனால் சம்பள விஷயத்தில் நடிகைகளுக்கு தாராள மனசு தனுஷ் கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.