மதுரையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தம்பதியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் சிந்தாமணியில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் தொழில்ரீதியாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் இவர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஜோசப் அவரது மனைவியுடன் மாநகர கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரும், அவரது மனைவியும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். இதனை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு காவல் துறையினர் இருவர்களிடமும் விசாரணை நடத்தியபின் தற்கொலைக்கு முயன்றதாக அவர்களை கைது செய்தனர்.