முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இறுதி உரையை மக்களிடம் நிகழ்த்தியுள்ளார்.
பிரித்தானியாவின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் டவுனிங் தெருவில் வைத்து தனது இறுதி உரையை நிகழ்த்தியுள்ளார். அப்போது போரிஸ் ஜான்சன் கூறியதாவது. புதிய பிரதமர் லிஸ் டிரஸ்க்கு எனது வாழ்த்துக்கள். இந்நிலையில் நான் நாட்டின் பிரதமராக இருந்த காலத்தில் பிரெக்சிட், தடுப்பூசி வெளியீடு மற்றும் உக்ரைனுக்கு ஆதரவு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி சாதனை படைத்தேன். இனிவரும் ஒவ்வொரு அடியிலும் புதிய பிரதமருக்கு உறுதுணையாக இருப்பேன். மேலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய பிரதமரின் பின்னால் நான் முழுமையாக நிற்க வேண்டிய தருணம் இது.
மேலும் அமைய இருக்கும் புதிய அரசாங்கத்திற்கு எனது தீவிரமான ஆதரவை தவிர என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது. மேலும் எரிசக்தி பொருட்களின் விலை ஏற்றத்திற்காக ஜனாதிபதி புடின்தான் காரணம். எனவே புதிய அரசாங்கம் இந்த நெருக்கடி அனைத்தையும் மேற்கொள்ளும் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார். இந்நிலையில் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பொறுப்பேற்பதற்காக ராணியால் முறைப்படி அழைக்கப்படும் போது, போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியில் இருந்தும், கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.