விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் அசல் கோளாறு. இவர் பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட விதத்தால் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
அதன் விளைவாக இவர் மக்களிடமிருந்து குறைவான வாக்குகள் பெற்ற நிலையில் அண்மையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.இந்நிலையில் அவர் உள்ளே பெண்களை தவறாக தொடுவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. இதுகுறித்து தற்போது பேசியிருக்கும் அசல், ”நான் தெரிந்து செய்யாத விஷயத்தை செய்ததாக இணையதளங்களில் பேசுவது வருத்தமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் பார்ப்பவர்களுக்கு தப்பாக தெரிந்தால் மன்னித்துவிடுங்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.