Categories
மாநில செய்திகள்

“நான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது அல்ல”…. முன் ஜாமீன் கோரும் பிரபலன் ஸ்டண்ட் மாஸ்டர்…..!!!!

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை மதுரவாயிலில் ஆகஸ்ட் 1ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்மான கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசினார். இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையத்தின் புகார் அளித்தார். அந்தப் புகாரில் இரு பிரிவினர்களிடையே கலவரத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் பேசிய கனல் கண்ணன் மீதும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மீதும் வழக்கு பதிவு கைது செய்து நடவடிக்கை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் படி, கனல் கண்ணம் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளிலன் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீ ரங்கநாதர் கோவில் வாசலில் கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும் அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதை புண்படுத்தக் கூடிய வகையில் இருப்பதாலே அதை இடிக்க வேண்டும். தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும் சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும். இதனையடுத்து கோவிலில் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை துரதிஷ்டவசமாக தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சமீப காலமாக இந்து மத கடவுள்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராக பல வீடியோ பதிவுகள் பதிவிட்டு வருவதாகவும் அதே தொடர்பாக தனி நபர்களும் அமைப்புகளும் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பதில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Categories

Tech |