தமிழக அரசு பாஜகவை சீண்டி பார்க்க வேண்டாம் என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரித்துள்ளார்.
ஆன்மீகத்திற்கும் இந்து விரோதத்திற்கும் இடையிலான யுத்தம். இந்த யுத்ததில் சேகர்பாபு அமைச்சர் சொல்லிவிட்டார் நூறு பேர நான் பார்த்துக்கிறேன் என. அதனால் இந்த அரசாங்கம் ஹிந்து விரோதி அரசாங்கம். அதற்கு இன்னொரு உதாரணம் கோவில்களை கொள்ளையடிக்க பார்க்கிறீர்கள். நான் அதை திரு மு.க. ஸ்டாலின் அவர்களோ, சேகர்பாபு அவர்களோ நான் எச்சரிக்கை விரும்புகிறேன்.
அறங்காவலர் குழு இல்லாத கோவிலில் ஒரு சாதாரண காவலர் நியமிக்க முதலமைச்சருக்கும் அறநிலையத்துறை மந்திரிக்கும் அதிகாரமில்லை. என்ன அதிகாரம் இருக்கு உங்களுக்கு. ஆலயங்கள், அறக்கட்டளைகள் திறக்க வேண்டும். அனாவசியமாக மத்திய சர்க்காரை வற்புறுத்துற அளவிற்கு எங்களை தள்ள வேண்டாம் என்கிறேன்.
7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இடிந்து போய் இருக்கு. அப்போ அறநிலைத்துறையானது கோவிலை எடுப்பதே அதை எடுத்து அழிப்பதற்காக என்று நான் சொல்கிறேன். நீங்கள் நேர்மையற்றவர்கள், இந்து விரோதிகள், திட்டமிட்ட ரீதியில் செயல்பட்டுக் கொண்டுள்ள கோவிலை எடுக்கிறீர்கள். இது முதல் வெற்றி கிடைத்துள்ளது இந்த குவின்ஸ் லேண்ட்.
நான் மூன்றரை வருடமாக கத்தி கொண்டிருக்கிறேன். என்னைய… நான் எதோ பைத்தியக்காரன் கத்திட்டு இருப்பான் என்ன பேச்சு பேசுறது. இன்று நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளது. 4 வாரத்தில் அவனை வெளியேற்ற வேண்டும் என்று .9 1/2 கோடி வாடகை பாக்கி கொடுக்க வேண்டும்.
ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன் அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு, பிஜேபியை அனாவசியமாக தூண்ட வேண்டாம். ஏனென்றால் அறக்கட்டளைகளும், கோவில்களும் பொதுப்பட்டியலில் இருக்கிறது. ஒரு ஸ்ட்ரோக்கில் மத்திய அரசு தலையில் வந்து உட்கார்ந்திடும், தயவு பண்ணி எங்களை நீங்கள் வந்து சீண்டி பார்க்க வேண்டாம் அரசியல் சட்டம் இன்று மத்திய சர்க்கார் பக்கம் இருக்கு என அவர் தெரிவித்தார்.