Categories
அரசியல்

நான் போகல…! ”எடப்பாடியே போகட்டும்”… சைலன்ட் மோடில் ஸ்டாலின் …!!

எடப்பாடி பழனிசாமி பார்த்தால் மக்கள் ஓட்டு போட வாக்களிக்க தயாராக இல்லை என புகழேந்தி குற்றம் சாட்டினார்.

சசிகலா கையை நீட்டி முதலமைச்சர் எடப்பாடி என கூறியதால் தானே காலில் விழுந்தார் எடப்பாடி பழனிச்சாமி. காலில் விழுந்து ஆட்சியை வாங்கி முதலமைச்சர் ஆனவர். என்ன அவங்களுடன் மனக்கசப்பு ?உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளே சென்றார்கள், வெளியே வந்து விட்டார்கள். அதனால் நான் ஆதரிக்கப் போவதில்லை, நியாயத்தை பேசுகிறேன்.முதலில் மு க ஸ்டாலின் முதலமைச்சர் ஏன் தேர்தல் பிரச்சாரத்திற்கு போகவில்லை ?  அவர் ரொம்ப சந்தோஷமாக போகவில்லை.

ஏனென்றால் அவர் கேட்டு தெரிஞ்சிருக்காரு… எடப்பாடி போறாரா தேர்தல் பிரச்சாரத்திற்கு? இந்த 9 மாவட்டம் தென்காசி, திருநெல்வேலி தவிர ஏழு மாவட்டத்தில் பாமக எப்படியாவது மேல வரணும் ?  அதிமுகவுடன் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.அப்போ ஸ்டாலின்  எடப்பாடி போனலே எல்லா இடத்திலும் தோற்றுவிடும். இதுவரைக்கும் அவரு தேர்தல் பிரச்சாரம் போய் எல்லா இடத்திலும் தோல்வியைத்தான் பரிசாக கொண்டு வந்திருக்கிறார் அந்த கட்சிக்கு… ஆகவே நான் பிரச்சாரத்திற்கு போக வேண்டிய அவசியமில்லை.

எடப்பாடிபழனிசாமியே போகட்டும் என்று அமைதியாக இருக்கிறார். ஆகவே எடப்பாடி பழனிசாமி பார்த்தால் மக்கள் ஓட்டு போட வாக்களிக்க தயாராக இல்லை. பாமகவை பற்றி ஜெயக்குமார் சொன்னார் அவரை கட்சியில் இருந்து எடுக்கல, சி.வி. சண்முகம் சொன்னாரு கட்சியிலிருந்து அவர் மீது நடவடிக்கை இல்லை என் மீது மட்டும் நடவடிக்கை பாய்ந்தது. நான் எப்போதும் கருத்துக்களை துணிச்சலாக சொல்கிறேன். அதை பற்றி கவலைப்படவில்லை நான் என புகழேந்தி தெரிவித்தார்.

Categories

Tech |