மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சதிஷ் பிஜ்ஹடே. இவரது மனைவி வனத்துறையில் பணியாற்றி வருகிறார். பி.டெக் பட்டதாரியான சதிஷுக்கு அவரது படிப்புக்கு ஏற்றவாறு எந்த வேலையும் கிட்டாததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். மேலும் வேலையின்மை காரணமாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் விவாகரத்து பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி சதிஷ் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தனது மனைவி சமோடா தில்வாரிக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தியும் அனுப்பியிருக்கிறார். அதில், “நான் செல்கிறேன். பணியில் இருக்கும் வேறொரு நபரை திருமணம் செய்துக்கொள்” என குறிப்பிட்டிருக்கிறார். மேலும், வீட்டிலும் இரண்டு பக்கத்திற்கு தற்கொலை குறிப்பும் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.