Categories
தேசிய செய்திகள்

நான் போக்கிரியா?…. அப்போ நீங்க பெரிய போக்கிரி!…. சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசி அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத்தருவதாக கூறி, அமமுக தலைவர் தினகரனை லஞ்சம் கொடுக்க வைத்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017ல் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து சுகேஷ் சந்திரசேகர் செய்த மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியது. புது டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு, தன் கைப்பட சுகேஷ் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். இக்கடிதத்தை தன் வக்கீல் வாயிலாக கவர்னர் மட்டுமின்றி, சிபிஐ அதிகாரிகளுக்கும் அனுப்பிவைத்துள்ளார். இவற்றில் சுகேஷ் சந்திரசேகர் கூறியதாவது “புது டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரும், புதுடில்லி மாநில அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினை கடந்த 2015 முதல் எனக்கு தெரியும்.

ஆம்ஆத்மி கட்சியின் சார்பாக ராஜ்யசபா எம்.பி., பதவி மற்றும் தென்மாநிலங்களில் அக்கட்சியில் முக்கிய பதவியைப் பெறுவதற்காக நான் பல கோடி ரூபாய் கொடுத்துள்ளேன். இதனைத் தவிர்த்து சிறையில் எனக்கு போதியவசதிகள் செய்து தருவதற்காக, சிறை அதிகாரிகளுக்கும் கோடிக் கணக்கில் பணம் கொடுத்துள்ளேன்” என்று கடிதத்தில் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதை மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் வருவதால் சுகேஷ் சந்திரசேகரை பா.ஜ.க பயன்படுத்தி வருகிறது என்றார். இந்த நிலையில் இதற்கு பதிலளித்து வழக்கறிஞர் வாயிலாக சுகேஷ் சந்திரசேகர் எழுதிய மற்றொரு கடிதத்தில் “கெஜ்ரிவால் அவர்களே, உங்களது கருத்துப்படி நான் போக்கிரி. அப்படி எனில், என்னிடம் ஏன் ராஜ்யசபா சீட் தருகிறேன் எனக் கூறி ரூபாய்.50 கோடி வாங்கினீர்கள்..? உங்களை மகாபோக்கிரியாக மாற்றிய விஷயம் எது.

இந்தியாவின் மிகப் பெரிய போக்கிரி என என்னை பற்றி கெஜ்ரிவால் கூறி இருக்கிறீர்கள். 20 -30 பேரிடம் பேசி ரூபாய்.500 கோடி பணம் திரட்டி கொடுத்தால், ஆம் ஆத்மி சார்பில் தேர்தல் சீட்டும், பதவிகளும் தருகிறோம் என கூறினீர்கள். தமிழகத்தில் சில எம்.எல்.ஏ-க்கள், நடிகர்களை ஆம் ஆத்மியில் இணைக்கும் வேலையை செய்ய வலியுறுத்தினீர்கள். நான் போக்கிரி எனில், நீங்கள் பெரிய போக்கிரி. ஒட்டுமொத்த ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் கொடுக்கவுள்ளேன். பதில் அளிக்க தயாராக இருங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |