Categories
அரசியல்

“நான் போலீஸை பாத்து ஓடினேன்!…. ஆனா இப்போ போலீஸ் என்ன பாத்து ஓடுது!”…. ஜோக்கடித்த ராஜேந்திர பாலாஜி….!!!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து உச்சநீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால நிபந்தனையாக ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த நிலையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.

எனவே ராஜேந்திர பாலாஜி வக்கீல்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் படைசூழ மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். அப்போது தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறிய ராஜேந்திர பாலாஜி விசாரணையை ஒத்தி வைக்குமாறு மனு ஒன்றை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியிடமிருந்து சற்று விலகினர்.

இந்த நிலையில் தன்னுடன் பலரையும் சேர்த்துக் கொண்டு ராஜேந்திர பாலாஜி பொது வெளியில் நடமாடுவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி இருக்கையில், ராஜேந்திரபாலாஜி தனது சக கூட்டாளிகளிடம் “போலீஸை கண்டு நான் ஓடினேன்… இப்போ போலீஸ் என்னை கண்டு ஓடுது” என கூறி ஜோக்கடித்துள்ளார். இருப்பினும் மூத்த நிர்வாகிகள் எதுக்கும் கவனமாய் இருங்கள் என்று ராஜேந்திர பாலாஜிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Categories

Tech |