Categories
தேசிய செய்திகள்

நான் மக்களை பார்க்ககூடாதா? உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது?…. பொங்கி எழுந்த தமிழிசை….!!!!

தெலங்கானா மாநிலத்தின் ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இருக்கிறார். எனினும் தமிழிசைதான் புதுச்சேரியின் முதலமைச்சர் போன்று செயல்படுகிறார் என எதிர்க் கட்சியினர் தொடர் குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். எனினும் தமிழிசை அவை எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இச்சூழலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியோடு புதுவை பல்கலைக்கழக புவிசார் அறிவியல் துறை மற்றும் மகாராஷ்டிரா, கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டத்தில் அறிவியல்-தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் பயன்பாடு பற்றிய கருத்தரங்கினை தமிழிசை துவங்கி வைத்தார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “மக்களுக்காகத் தான் அனைத்து அலுவலகமும் உள்ளது. மக்களை பார்ப்பதை தவிர்க்கவேண்டும் என்று கூறுவது தவறானதாகும். நான் மக்களை பார்க்ககூடாது என கூறும் அதிகாரத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு யார் கொடுத்தது..? மக்களின் பிரச்சனைகளை தெரிந்து கொண்டு அதனை அதிகாரிகளுக்கு கூறுவதற்குதான் இந்த சந்திப்பு கூட்டமே. நாட்டில் 7500 ஸ்டார்ட் அப் கொண்டுவரப்படுகிறது.

இணையத்தில் என் படங்களை வைத்து விமர்சனம் செய்வதும், தவறாக பயன்படுத்துவதும் நடந்து வருகிறது. நான் உண்மையாக உள்ளேன். இதனால் நான் அதனை பற்றி கவலைப்படவில்லை. மக்களுக்கான என் பணி தொடரும். இதற்கிடையில் தெலுங்கானா மக்கள் தன்னை பாராட்டி வருகின்றனர். அரசுக்கும் எனக்கும் சில பிரச்னைகள் இருக்கிறது. அங்கு உள்ள முதலமைச்சர் மத்தியஅரசை எதிர்க்கிறார். இதன் காரணமாக நான் அங்கு சில பணிகளை மேற்கொள்ளும் போது என்னை எதிர்க்கிறார்” என்று பேசினார்.

Categories

Tech |