பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக நயினார் நாகேந்திரன்…. பாஜகவின் மாநிலத்தின் துணை தலைவராக இருக்கிறார். இவர் மனவேதனையில் இருப்பதாக தொடர்ந்து சொல்லி வந்த நிலையில் தற்போது அவர் வெளிப்படையாக முக்கிய தகவலை தெரிவித்து இருக்கின்றார். அதில், முன்னாள் எம்எல்ஏ வி கே ஆர் சீனிவாசன் அதிமுகவில் இணைந்ததை பாஜக தலைமை தடுத்திருக்க வேண்டும். வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் மீண்டும் திமுகவில் சேர்ந்ததை தடுத்திருக்க வேண்டும். இவர்களை கட்சியிலிருந்து செல்ல தலைமை அனுமதித்து இருக்க கூடாது என பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையோடு பாஜகவுக்கு வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனுபவம் மிக்க தலைவர்கள் பாஜகவில் இருப்பது அவசியம். கடந்த மாதம் பல்வேறு பொறுப்புகளுக்கு பாஜக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அந்த நியமனத்தில் தனக்கு மன வருத்தம் இருப்பதாகவும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியிலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேரை போக விட்டு இருக்க கூடாது. கட்சி மாறியது பற்றிய மனவேதனையை தலைமைக்கு தெரிவித்து விட்டேன். அதே நேரத்தில் நான் பாஜகவிலிருந்து வெளியேறுவது என்று முடிவு செய்யவில்லை. அப்படி வரக்கூடிய தகவல்களில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் சொல்லிய இந்த கருத்து தமிழக பாஜக உள்கட்சி பூசலை அம்பலப்படுத்தியுள்ளது. இதனால் கட்சி வரும் நாட்களில் எது போன்ற நடவடிக்கை எடுக்கப்போகிறது ? தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் தான் இருக்கிறது. ஆகையால் தேர்தலுக்கு முன்னதாக மனக் கசப்புகளை நீக்கிவிட்டு தேர்தலில் பாஜக எவ்வாறு சந்திக்கப் போகிறது ? என்பது மிக முக்கியமாக பார்க்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.