பிரதானிய மன்னர் சார்லஸ் – கமீலா தம்பதிக்கு பிறந்த மகன் என தன்னை சொல்லிக் கொள்ளும் நபர் மீண்டும் அது பற்றி பேச தொடங்கி இருக்கின்ற நிலையில் சார்லஸ் அது தொடர்பில் பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகின்றார். ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர் simon dorante day(56). இவர் சார்லஸ் -கமீலா தம்பதியினருக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வருகின்றார். இந்த நிலையில் அதன்படி தனது வளர்ப்பு பாட்டி மரணப்படுக்கையில் இருந்த போதும் தன்னிடம் நீ சார்லஸ் கமீலாவிற்கு ரகசியமாக பிறந்த மகன் என கூறியதாக தெரிவிக்கின்றார்.
ஆனால் இளவரசர்கள் வில்லியம் ஹரியின் தந்தையான மன்னர் சார்லஸ் simon கூற்றுக்களை புறக்கணித்து அது தொடர்பில் எதுவும் அறிக்கைகள் வெளியிடாமல் இருக்கின்றார். ஏனென்றால் இது பற்றி பேசி ஊடக விளம்பரங்களை வழங்க சார்லஸ் விரும்பவில்லை மேலும் சமீபத்தில் கூட simon கமீலாவின் கர்ப்ப கால புகைப்படம் எனக் கூறி ஒரு புகைப்படத்தை கசிய விட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் dna பரிசோதனை மூலம் உண்மையை உலகிற்கு கொண்டு வர அவர் விரும்புவதாக தெரிகிறது இருப்பினும் மன்னர் சார்லஸ் அவரது எந்த கூற்றுகளுக்கும் பதில் அளிக்கவில்லை.