Categories
உலக செய்திகள்

“நான் மர்மமான முறையில் உயிரிழந்தால்”…. ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தலா….? எலான் மிஸ்கின் பரபரப்பு ட்விட்டர் பதிவு….

எலான்  மஸ்கின் டிவிட்டர் பதிவால் ரஷ்யாவிடமிருந்து அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என சந்தேகம் கிளம்பியுள்ளது.

டுவிட்டரின் உரிமையாளராக மாற உள்ள எலான் மஸ்க்  உயிருக்கு ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. உக்ரைனுக்கு உதவியதன் காரணமாக எலான் மஸ்க்கிற்கு ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைனில் எலான் மஸ்க்  உதவியுடன் அவருக்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க்  செயற்கைக்கோள் ப்ராட் பேண்ட் சேவை செயல்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் இதே போன்று பல உதவிகளை அவர் உக்ரைனுக்கு செய்திருக்கின்றார். இந்த நிலைமையில் “நான் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்தால் இதனைப்பற்றி அறிவது நன்றாகவா இருக்கிறதல்லவா”என எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். மேலும் அவருடைய இந்த திடீர் டுவிட்டர் பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக அவர் மற்றொரு பதிவையும் பகிர்ந்திருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைனில் இருக்கும்  பாசிச படைகளுக்கும் ராணுவ தொலைத்தொடர்பு சாதனங்களை வழங்குவதில் எலான் மஸ்க் ஈடுபட்டிருக்கிறார்.

நீங்கள் எவ்வளவு முட்டாள்தனமாக விளையாடினாலும் சரி இதற்கு நீங்கள் பொறுப்பேற்கபடுவீர்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் இந்த உபகரணங்கள் அமெரிக்க பாதுகாப்பு துறையின் தலைமை இடமாக விளங்கும் பென்டகனால்  உக்ரைனுக்கு வழங்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பதிவு உக்ரைனுக்கு  உதவியதற்க்காக ரஷ்யாவால் எலான் மஸ்க் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறதா  என சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து எலான் மஸ்க் தான் மர்மமான முறையில் உயிரிழக்கலாம் என பதிவிட்டு  சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |