Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மினிஸ்டர்…! நான் தான் கவர்மெண்ட்… முதல்வரிடம் பேசுறேன்…!!

போராடி வரும் அரசு ஊழியர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் இப்பொழுது அவர்களை அழைத்துப் பேசியதும் அரசு பேச்சுவார்த்தை தானே. மினிஸ்டர் என்றால் என்ன ? கவர்மெண்ட் தான மினிஸ்டர். நான் கூப்பிட்டு பேசினால் அரசு கூப்பிட்டு பேசின மாதிரி தானே.

அவர்கள் எல்லாரையும் அழைத்து உட்காரவைத்து பேசி, அவர்கள்  கருத்துக்களை எல்லாம் கேட்டு அவர்களுடைய கோரிக்கைகளை எல்லாம் கேட்டு, அதனடிப்படையில் அவர்களிடத்தில் தெளிவாகவே சொல்லி இருக்கிறோம். யாரைக் காட்டிலும் அவர்களுக்கு நாங்கள் தான் அதிகமாக செய்து கொண்டிருக்கிறோம்.

நிதி நிலைமையும் நாம் கொஞ்சம் பார்க்க வேண்டியது இருக்கு. நிச்சயமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என அவர்களிடத்தில் சொல்லி இருக்கின்றோம். அதனால நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவர்களை மதித்து கூப்பிட்டு இருக்கிறோம் எங்களுடைய கருத்துக்களை எல்லாம் சொல்லி போராட்டத்தை வாபஸ் வாங்கி விடுங்கள்…

பொதுமக்களுடைய நலன் முக்கியம், அரசு நிர்வாகத்தின் நலன் முக்கியம். இந்த  இரண்டு விஷயங்களை நாம் பார்க்கவேண்டியுள்ளதால் ஸ்டிரைக்கை வாபஸ் வாங்குவது தான் நல்லது. எந்த கோரிக்கை இருந்தாலும் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். அரசைப் பொறுத்த வகையில் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை கண்டிப்பாக எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |