Categories
தேசிய செய்திகள்

நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்… 10 கிலோ அரிசி இலவசம்… கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர்…!!!

நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் ஏழை மக்கள் அனைவருக்கும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவேன் என கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா, தனது தொகுதி பாதாமியில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பிறகு பேசியவர், “ஏழை மக்கள் எவரும் உணவு இன்றி பசியால் வாட கூடாது. அவர்கள் அனைவரும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும். வெள்ளம் மற்றும் வறட்சி எது வந்தாலும் மக்கள் வயிறு நிறைய சாப்பிட்டு நிம்மதியாக இருக்க வேண்டும். நான் மீண்டும் முதல்-மந்திரியாக ஆனால் ஏழை மக்கள் அனைவருக்கும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவேன். நான் ஆட்சியில் இருந்தவரை கஜானா எப்போதும் நிரம்பிய இருக்கும். எடியூரப்பா வந்த பிறகு கஜானாவில் பணம் எதுவும் இல்லை.

சமுதாய பவன் கட்டுவதற்கு நிதி ஒதுக்குமாறு மந்திரியிடம் கேட்டேன். ஆனால் கஜானாவில் பணம் இல்லை என்று எடியூரப்பா கூறி விட்டதாக அவர் கூறினார். நான் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறேன். பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் சில மந்திரிகள் மட்டுமே எனது பேச்சைக் கேட்கிறார்கள். அவர்களிடம் சொல்லி உங்களின் பணிகளை என்னால் செய்து கொடுக்க முடியும். இந்தத் தொகுதியில் 7000 வீடுகளை ஒதுக்குமாறு வீட்டு வசதித் துறை மந்திரி சோமண்ணாவிடம் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று அவர் கூறிவிட்டார்” என்று சித்தராமையா கூறியுள்ளார்.

Categories

Tech |