கட்சி தொடங்குவது பற்றி தான் முடிவு எடுக்கும் வரை அனைவரும் பொறுத்திருங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என்று இணையதளத்தில் அறிக்கை ஒன்று வெளியாகியது. ஆனால் அந்த அறிக்கைக்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதனால் அவர் கட்சி திரும்புவாரா? இல்லையா? என்று அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில், அரசியல் நிலைப்பாடு பற்றி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து முடிவு செய்வதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் சென்று ஆலோசனை நடத்தி வருகின்றார். அந்த ஆலோசனையில், தான் கட்சி தொடங்கினால் தற்போதைய சூழலில் வரவேற்பு எப்படி இருக்கும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமன்றி மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை என்று கூறிய அவர், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கும் வரை பொறுத்திருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.