தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. நேற்று திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில் சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, ” நான் முதல்வராக இருப்பது சேலத்திற்கு கிடைத்த பெருமை. நான் பல்வேறு பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். நான் பொறுப்பேற்றதும் கடும் வறட்சி, புயல், கொரோனா என பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது” என்று கூறியுள்ளார்.