Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் முதல்வரானால்….. இந்தியா அப்படி போக முடியாது…. அதிரடி காட்டிய சீமான் …!!

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், இந்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வெளிநடப்பு செய்தது பற்றிய கேள்விக்கு, இந்த செயலை நான் வெறுக்கிறேன். அப்படி செய்து இருக்க கூடாது. அடிப்படையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்களவர்களுக்கும், இந்தியாவிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நாங்கள் இந்த நாடு நாடாக வதற்கு முன்பிருந்தே நிலைத்து வாழக்கூடிய பூர்வ குடிமக்கள். அப்படி பார்த்தால் இது என் நாடு, பாரத நாடே பைந்தமிழர் நாடு.

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறார்… என் நாடு எனக்காக நிற்கவில்லை என்கிற வலி எனக்கு இருக்கிறது. எனக்கும் துளியும் சம்பந்தமில்லாத நாடுகளை எல்லாம் எங்களை ஆதரிக்கிறது. எங்கள் உணர்வோடு இணைந்து நிற்கிறது. ஆனால் 10 கோடித் தமிழர்களை இந்த நாட்டில் வைத்துக்கொண்டுள்ளது. எட்டு கோடி இந்த நிலத்தில் மட்டும் இருக்கோம், கர்நாடகாவில் 1.25 கோடி இருக்கும், ஒவ்வொரு மாநிலத்திலும் 20 லட்சம்,  30 லட்சம் என்று பரவி வாழ்கிறோம்.

எங்களுக்காக எங்கள் உணர்வை மதித்து எங்களுக்காக நிற்கவில்லை என்கிற வலி இருக்கிறது. அதை ஆண்டுகொண்டு இருக்கிற அதிமுக அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். முதலில் தீர்மானத்தை நிறைவேற்றி, ஐநாவில் இதேமாதிரி வரும்பொழுது, இந்தியா ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும்  தமிழர்களுக்காக நிற்க வேண்டும் என்கிற அழுத்தத்தைக் கொடுத்து இருக்க வேண்டும், அதை தவறிவிட்டது.

பின்வரும் காலங்களில் இந்தியா அப்படியே தப்பித்துக் கொண்டு போக முடியாது. ஒருவேளை நாங்கள் நாட்டை ஆளும் உயரத்தில் வந்து நிற்கும் போது அப்படி எல்லாம் எழுந்து போக முடியாது, போகக்கூடாது என சீமான் கூறினார்.

Categories

Tech |