மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு “நான் முதல்வர்” என்ற திட்ட தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டு திட்டமான “நான் முதல்வர்” என்ற தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்த திட்டத்தை மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் வைத்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முழுவதிலும் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து 70 அரசு பள்ளிகள் மற்றும் 27 அரசு உதவி பெரும் பள்ளிகள் என மொத்தம் 97 பள்ளிகளில் இந்த தொடக்க விழா ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 23,455 மாணவ-மாணவிகள் பங்கேற்று முதல்வரின் உரையை கேட்டு பயனடைந்தனர்.