Categories
சினிமா

நான் மோசடி செய்கிறேனா?…. “7 நாட்களுக்குள் ஆதாரம் வேண்டும்”….. சினேகனுக்கு எதிராக கொந்தளிக்கும் பிரபல நடிகை….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் தன்னுடைய பெயரை பயன்படுத்தி சின்னத்திரை நடிகையும் பாஜக பிரமுகரான ஜெயலட்சுமி பண மோசடி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதாவது, பாடலாசிரியர் சினேகன் கமலின் மக்கள் நீதி மேயம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு முதல் சினேகன் அறக்கட்டளையின் நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் பலருக்கு பல உதவிகளை செய்து வருகிறார். ஆனால் சமீப காலமாக இணையதளத்தில் தனது பவுண்டேஷன் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் பண வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் பரபரப்பு புகார் அளித்தார் இது குறித்து வருமானத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் தன்னுடைய அறக்கட்டளை பேரில் பணம் பெறுவதால் தன்னிடம் விசாரணை செய்தனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்ள முகவரியை 2 முறை சட்டபூர்வமாக விளக்கம் கேட்டு கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் தரவில்லை. இதனால் சென்னை காவல் ஆணையத்தில் எனது பெயரை பயன்படுத்தி போலித் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளதாக சினேகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விவாகாரம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பாஜக பிரமுகர் ஜெயலட்சுமி, கவிஞர் சினேகன் என் மீது கூறிய குற்றச்சாட்டைக்கு ஏழு நாட்களுக்குள் ஆதாரத்தோடு விளக்கம் அளிக்க நோட்டீஸ் வழங்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் சினேகன் கூறும் குற்றச்சாட்டுக்கு அவர் தரப்பிலிருந்து எனக்கு எந்த விதமான தொலைபேசி அழைப்போ, கடிதமோ வழக்கறிஞர் மூலமாக மனு என்று எதுவும் வரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |