படுத்த படுக்கையாக இருக்கும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது திறமையின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
நம் குறைகள் ஒரு போதும் நமது மன உறுதியை சோக படுத்தாது என்பதற்கு ஒரு உதாரணமாக மீனா உள்ளார். இவர் பலவீன தசைகள் காரணமாக சிறுவயதிலேயே படுத்த படுக்கையாக ஆகிவிட்டார். ஆனாலும் தனது லட்சியத்தை விடாமல் மக்கள் விரும்பும் கலைப் பொருட்களை உருவாக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து ரசிகர் பட்டாளத்தையே சேர்த்து வைத்துள்ளார்.
படுத்த படுக்கையாக இருந்த படியே வீட்டு உபயோகப் பொருட்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இவரது கலைப் படைப்புகள் ஆன்லைனில் விற்கப்படுகிறது. மேலும் இந்த கலைப் பொருள்கள் செய்வதை பத்தாம் வகுப்பு படிக்கும்போதே இவர் கற்றுக்கொண்டார் .எனினும் தொடர்ந்து அவரால் படிக்க முடியவில்லை. சுய ஆர்வத்துடன் இதனை கற்றுக் கொண்டதால் கலை பொருட்களை உருவாக்க முடிவெடுத்தார். இதையடுத்து நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்று சுதந்திரமாக தனது படைப்புகளை செய்து மகிழ்ச்சி அடைந்து வருகிறார்.