Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நான் யாரையும் காதலிக்கவில்லை… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரகுல் பிரீத் சிங்…!!

நடிகை ரகுல் பிரீத் சிங் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும்,விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் பரவிய வதந்திக்கு விளக்கமளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் ‘என்னமோ ஏதோ ‘ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் மூலம் பிரபலமடைந்தார். அடுத்ததாக மீண்டும் கார்த்தியுடன் இணைந்து ‘தேவ்’ திரைப்படத்தில் நடித்தார். இதையடுத்து நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படத்திலும் நடித்து அசத்தினார். தற்போது இவர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரகுல் பிரித் சிங் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் அவருடன் திருமணம் செய்ய இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதற்கு பதிலளித்துள்ள ரகுல் பிரீத் சிங் ‘நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு திருமண ஏற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை . நான் தனியாக தான் இருக்கிறேன். என்னுடைய திருமணம் எப்போது நடந்தாலும் அது பெரிய கொண்டாட்டமாக இருக்கும். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல திரைப்படங்களை கைவசம் வைத்து இருக்கிறேன். இந்தப் படங்கள் அடுத்த வருடம் திரைக்கு வரும்’ என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |