தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதாவது, அமைச்சர், துணை முதலமைச்சர் என சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதியை சுற்றி வாரிசு அரசியல் நிலவுகிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதுதான் தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்திருக்கிறது. முதன் முறையாக சென்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று எம்எல்ஏவாக தேர்வான உதயநிதி ஸ்டாலினுக்கு 17 மாதங்களில் அமைச்சர் பதவி தேடிவந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என எதிர்கட்சிகள் அவரை விமர்சித்து வருகின்றனர். சுமார் 45 வருடங்கள் போராடிதான் மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவரானார். முதல்வர் மு.க.ஸ்டாலினை விட உதயநிதி ஸ்டாலின் மீதான விமர்சனம் இம்முறை அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதாவது, ரெட்ஜெயண்ட் மூவீஸ் வாயிலாக சினிமாத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என உதயநிதி மீது விமர்சனம் உண்டு.
நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழ் சினிமாத் துறையில் ரெட் ஜெயண்ட் ராஜ்ஜியம் தான் என கூறும் அளவுக்கு பெரிய படங்கள் முதல் சிறுபட்ஜெட் படங்கள் வரை அவர்கள் தான் ரிலீஸ் செய்துக்கொண்டு இருக்கின்றனர். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பல பேரை மிரட்டி படத்தை வாங்கி வெளியிடுவதாகவும் தகவல் வெளியாகியது. எனினும் இந்த குற்றச்சாட்டு பற்றி இதுவரையிலும் யாரும் நேரடியாக புகார் அளிக்கவில்லை. அதே சமயத்தில் கட்டா குஸ்தி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில், நான் யாரையும் மிரட்டி படங்களை வாங்கவில்லை என தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உதயநிதி பதிலளித்தார்.