சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சசிகலா கலந்து கொண்டார். அங்கு கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா ஆதரவற்றவர்களுக்கு புத்தாடை மற்றும் கேக் உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, நான் யார் பக்கமும் இல்லை. நான் அனைவருக்கும் பொதுவான நபராக தான் செயல்படுகிறேன்.
நான் இருக்கும் வரை அ.தி.மு.க தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். மேலும் அ.தி.மு.க-வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை நான் தொடங்கி விட்டேன். அ.தி.மு.க வை யாராலும் அசைக்க முடியாது. இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றார்கள். தனக்கு பின் யார் வந்தால் நன்றாக இருக்கும் என்பது ஜெயலலிதாவிற்கு நன்றாகவே தெரியும். ஜெயலலிதா தான் மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என சொன்னார் என சசிகலா கூறியுள்ளார்.