இந்திய ராணுவத்தில் தான் சேர விரும்பியதாகவும், குடும்பக் சூழ்நிலை காரணங்களால் சேர முடியவில்லை என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
அசாம் ரைபிள்ஸ் மற்றும் இந்திய ராணுவத்தின் 57வது மலைப் பிரிவு வீரர்களிடம் உரையாற்றிய அவர், ஆயுதப்படையில் சேர நானும் தேர்வு எழுதியுள்ளேன். சிறுவயதில் இருந்தே ஒரு கதை சொல்ல விரும்புகிறேன், எனக்கும் ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டு ஒருமுறை ஷார்ட் சர்வீஸ் கமிஷன் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதியிருந்தேன். பிரச்சனையால் என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை. ஒரு குழந்தைக்கு ராணுவ சீருடை கொடுத்தால், அவனது ஆளுமை மாறுவதைப் பார்க்கலாம். இந்த சீருடையில் ஏதோ இருக்கிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவும் உடன் இருந்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்து பேசினார். இந்நிகழ்ச்சியின் போது, இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்ட மோதலின் போது பாதுகாப்புப் படையினர் காட்டிய துணிச்சலை ராஜ்நாத் சிங் நினைவு கூர்ந்தார்.