Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரெடி…! நீங்க எப்போ வர்றீங்க ? மாஸ் காட்டிய அமைச்சர்…. சிக்கி கொண்ட திமுக …!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வியூகம் தற்போதைய களைகட்டியுள்ளது. ஆளும் அதிமுக மூன்றாவது முறையாக தொடர்ந்து அரியணையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடும்,  10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு திமுகவும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்மையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் நடந்த 2ஜி ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து சரமாரியாக விமர்சனம் செய்தார். திமுகவை அதிர வைக்கும் அளவில் முதலமைச்சர் குற்றச்சாட்டு இருந்ததை அடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் மக்களவை உறுப்பினருமான ராஜா முதல்வருக்கு பதிலடி கொடுத்தார்.

ஊழல் குற்றச்சாட்டு குறித்து விவாதத்திற்கு நான் ரெடி… அதிமுக சார்பில் ஊழல் பற்றி பேச முதலமைச்சர் ரெடியா என்று கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  முதலமைச்சர் ஏன் வரவேண்டும் ? நான் வருகின்றேன், திமுக தயாரா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |