Categories
மாநில செய்திகள்

நான் ரெடி நீங்க ரெடியா இபிஎஸ்??…. என் வீட்டில் எப்படி திருடுவேன்?…. சவால் விடுத்த ஓபிஎஸ்….!!!!

ராஜினாமா செய்ய எடப்பாடி பழனிச்சாமி தயாரா என்று ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்து இருக்கிறார். “அடி மட்ட தொண்டர்களை சந்திப்போம். அவர்கள் முடிவுபண்ணட்டும். பதவி ஆசை இல்லாத என்னை பதவி ஆசை இருப்பவன் என கூறுபவர்களுக்கு சவால் விடுப்பதாக” மதுரை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பின்போது ஆதரவாளர்களிடையே ஓபிஎஸ் பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன. அ.தி.மு.க-வில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில் அண்மை காலமாக ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும் அதிகமானோர் பெரியகுளம் அருகேயுள்ள ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டில் நேற்று சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். அதன்பின் நேற்று மதுரை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், திருமங்கலம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் சுமார் 200-க்கும் அதிகமானோர் பெரியகுளம் அருகேயுள்ள ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டிற்கு வந்து அவருக்கு மாலை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தன்னை சந்திக்க வந்த ஆதரவாளர்கள் இடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது “கவுரமான பொதுகுழுவில் சி.வி சண்முகம் செய்தது கேலிகூத்தான செயல் என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுக்கபட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி தன்னை பொது குழுவில் கலந்துகொள்ள விடாமல் சதிசெய்யப்பட்டது. அ.தி.மு.க தலைமை கழகம் எடப்பாடி பழனிச்சாமியின் அப்பாவிட்டு சொத்தா..? என கேள்வி எழுப்பிய பன்னீர் செல்வம், எனது வீட்டில் நான் திருடுவேனா..? தலைமை கழகம் என் வீடு என்று வேதனை தெரிவித்துள்ளார்.  அ.தி.மு.க-வில் மட்டுமே தொண்டர்கள் தலைமை பதவிக்கு வரமுடியும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த போது 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம் என்று அறிவுறுத்தினேன்.

அவ்வாறு ராஜினாமா செய்துவிட்டு தொகுதியில் கட்சிவேலை பார்க்க வலியுறுத்தினேன் என ஓ.பி.எஸ்குறிப்பிட்டார். நான் பேச தொடங்கினால் வேறுயாரும் பேச முடியாது. 13 வருடங்களுக்கு பின் என்னை தான் முதலமைச்சராக ஆக்கினார்கள். எனினும் எடப்பாடி ராஜினாமா செய்தால் நானும் ராஜினாமா செய்கிறேன். கீழேபோய் தொண்டர்களை சந்திப்போம். அவர்கள் முடிவுசெய்யட்டும்” என பேசினார். மதுரையிலிருந்து ஓபிஎஸ்-ஐ சந்திக்க வந்த கட்சிநிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களிடையே ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு பேசியிருக்கிறார்.

Categories

Tech |