Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரெடி… மோடி நீங்க ரெடியா?… நாராயணசாமி சவால்…!!!

ஊழல் புகாரில் நீதிபதி விசாரணைக்கு நான் தயார் உத்தரவிட மோடி தயாரா என நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சியினரும் மக்களை கவரும் வகையிலான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஊழல் புகாரில் நீதிபதி விசாரணைக்கு நான் தயார், உத்தரவிட மோடி தயாரா?என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார். மாநில அந்தஸ்து பற்றி என் ஆர் காங்கிரஸ் பேசுகிறது. ஆனால் பாஜக அது பற்றி எதுவும் பேசவில்லை. என் ஆர் காங்கிரஸ் கொள்கைக்கு எதிராக செயல்படும் பாஜக கூட்டணியில் இருந்து ரங்கசாமி விலக தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |